இனிமேல் அரசு அலுவலகங்கள் 7 மணிக்கே தொடங்கும்: முதல்வர் அதிரடி அறிவிப்பு..!

மின்சார சிக்கன நடவடிக்கை காரணமாக இனி காலை 7:30 மணிக்கு அரசு அலுவலகங்கள் தொடங்கப்படும் என பஞ்சாப் முதல்வர் அதிரடியாக அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பொதுவாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் காலை 9 மணி முதல் 10:00 மணி தான் அரசு அலுவலகங்கள் தொடங்குகின்றன என்பதும், மாலை 5 மணி அல்லது 6 மணி வரை அலுவலகங்கள் இயங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் காலை 10 மணிக்கு அரசு அலுவலகங்கள் தொடங்குவதால் மின்விசிறி மற்றும் ஏசி ஆகியவை இயக்கப்படும் என்றும் அதனால் மின்சாரம் அதிகமாக செலவாகிறது என்று பஞ்சாப் முதல்வருக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட பஞ்சாப் முதல்வர் மின் சிக்கன நடவடிக்கை எடுக்க முடிவு செய்தார்

இதனை அடுத்து காலை 7:30 மணி முதல் மதியம் 2 மணி வரை அரசு அலுவலகங்கள் செயல்படும் என பஞ்சாப் முதல்வர் தெரிவித்தார். காலை 7.30 மணிக்கு அரசு அலுவலகங்கள் தொடங்கினால் மின்சாரம் குறைவாக செலவு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இதற்கு உதாரணமாக காலை 7:30 மணிக்கு முதல்வர் தனது அலுவலகத்தில் வந்து பணியை தொடங்கினார். இதனை அடுத்து இன்று முதல் பஞ்சாப் மாநிலம் முழுவதும் அடுத்த அறிவிப்பு வரும் வரை காலை 7:30 மணிக்கு அரசு அலுவலகம் தொடங்கும் என்றும் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே அரசு அலுவலகங்கள் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த நடவடிக்கைக்கு அரசு ஊழியர்கள் மத்தியில் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கோடைகாலம் முடியும் வரை இந்த நடவடிக்கையை தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களும் பின்பற்றலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. தமிழகத்திலும் அதே போல் காலை ஏழு முப்பது மணி முதல் 2 மணி வரை அரசு அலுவலகங்கள் செயல்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.