அரசு கேபிள் டிவி சேவை முடக்கம்: அரசு தரப்பில் விளக்கம்!!

அரசு கேபிள் டிவி சேவையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு 24 மணி நேரத்தில் சரி செய்யப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து செய்தி மக்கள் தொடர்பு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு மென்பொருள் சேவைகள் வழங்கி வந்த தனியார் நிறுவனத்தின் மென்பொருள் சேவைகள் திடீரென தடைபட்டதாக கூறியுள்ளது.

சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ்!! என்ன தெரியுமா?

இதன் காரணமாக நேற்று முதல் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் சேவைகள் பல பகுதிகளில் உள்ள செட்டாப் பாக்ஸ்களில் தடங்கல் ஏற்பட்டது.

இந்நிலையில் பாதிப்புகளை உடனடியாக சரி செய்ய தொழில்நுட்பக் குழு முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது.
இதனால் அதிகபட்சம் இன்னும் 24 மணி நேரத்தில் தொழில்நுட்ப கோளாறுகள் முழுமையாக சரிசெய்யப்படும்.

உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி: துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை!!

இது வரையில் அரசு கேபிள் நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும்படி கேபிள் ஆபரேட்டர்கள் பொதுமக்கள் வாடிக்கையாளர்கள் அனைவரையும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.