வளைவில் வேகம் எடுத்த அரசு பேருந்து: பதைபதைக்கும் காட்சிகள்!!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே அதிவேகமாக வந்த அரசு பேருந்து ஒன்று சரக்கு வேன் மீது மோதியது சிசிடிவி-யில் பதிவாகியுள்ளது.

நம் தமிழகத்தை பொறுத்தவரையில் கடந்த சில நாட்களாகவே சாலை விபத்துகள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தேனி மாவட்டத்தில் கடந்த 9-ம் தேதி அரசு பேருந்து ஒன்று மதுரையை நோக்கி சென்று கொண்டிருந்தது.

அப்போது ஆண்டிப்பட்டி அடுத்து டி.சுத்தாரம் விளக்கு பகுதியில் செல்லும் போது, எதிரே வந்த சரக்கு வேன் மீது மோதியது. இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாக தெரிகிறது.

சம்பவம் அறிந்து விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment