Connect with us

தேநீர் விருந்து: ஓபிஎஸ் Present.. ஈபிஎஸ் Absent!

Capture 21

தமிழகம்

தேநீர் விருந்து: ஓபிஎஸ் Present.. ஈபிஎஸ் Absent!

75-வது சுதந்திர தின விழாவையொட்டி ஆளுநர் மாளிகையில் தமிழக முதல்வர், அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்டோருக்கு தேனீர் விருந்து நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் ஆளுநர், தமிழக முதல்வர், சபாநாயகர் அப்பாவு ஆகியோர் ஒன்றாக கலந்துகொண்டதாக தெரிகிறது. இந்த சூழலில் ஆளுநரின் தேநீர் விருந்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் புறக்கணித்து இருப்பதாக கூறப்படுகிறது.

அதேபோல் ஓபிஎஸ் அவர்கள் ஆளுநரின் தேநீர் விருந்தில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஓபிஎஸ் ஆதரவாளர்களான வைத்தியலிங்கம் மனோஜ் பாண்டியனுடன் பங்கேற்று இருப்பதாக தெரிகிறது.

இதனை தொடர்ந்து ஆளுநரின் தேநீர் விருந்தில் பாஜக உறுப்பினர்களுக்கு சிறப்பு முன்னுரிமை அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், 75-வது சுதந்திர தின விழாவையொட்டி கட்டுரைப்போட்டி நடைபெறும் என்றும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஒரு லட்சம் பரிசு தொகை வழங்கப்படுவதாக தெரிவித்திருந்தார்.

அந்த வகையில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இத்தகைய நிகழ்ச்சியில் பரிசு தொகை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top