ஆளுநரின் செயலானது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது: டி.ஆர் பாலு காட்டம்..

தமிழக அரசு அனுப்பிய நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியதால்  பல்வேறு கட்சி பிரதிநிதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தமிழகத்தின் உரிமையை பறீக்காதீர்கள் என ஆளுநருக்கு திமுக உள்ளிட்ட எதிர்கட்சி எம்பிக்கள் கண்டனம் தெரிவித்து மக்களவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதனை தொடர்ந்து பேசிய திமுக எம்.பி டி.ஆர்.பாலு:

தமிழக கட்சிகள் மட்டுமின்றி, மக்களும் கூட நீட் தேர்வை எதிர்த்து வருகின்றனர். மக்களின் குரலுக்கு செவிசாய்க்காத ஆளுநர் தமிழகத்தில் இருந்து என்ன பயன்?. மக்களின் கோரிக்கைகளை மதிக்காத ஆளுநர் ஏதற்கு. இன்று அண்ணாவின் நினைவு நாளையொட்டி அவர் கூறியதை நினைவுகூற விளைவில்லை என தெரிவித்தார்.

மேலும், ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் ஏன் என்று அறிஞர் அண்ணா அன்றே கேட்டார். அந்த வகையில் ஆளுநரின் இந்த செயல் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என மக்களவையில் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment