ஆன்லைன் சூதாட்டம்! தற்கொலைகளை கண்டுகொள்ளாத ஆளுநர்- அன்புமணி ராமதாஸ்!!

ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளை தமிழக ஆளுநர் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையளிக்கிறது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் ஒவ்வொரு பொழுதும் ஓர் உயிர் பலியுடன் தான் விடிவதாகவும், திருமங்கலம் பகுதியில் டென்னிஸ் வீரர் வினோத்குமார் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார். ஆன்லைன் ரம்மியால் பணத்தினை இழந்து சாதிக்க வேண்டிய வயதில் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறியுள்ளார்.

மத்திய பிரதேசத்தில் 4 கால்களுடன் பிறந்த பெண் குழந்தை!

இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்ய சட்டம் நிறைவேற்றப்பட்டாலும், இன்னும் ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என கூறியுள்ளார். ஒன்றரை ஆண்டுகளில் 38 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சட்டம் காலாவதியான பின்னர் 16 நாட்களில் 6 பேர் தற்கொலை செய்து கொண்டதாக டுவிட்டரில் கூறியுள்ளார்.

எனவே தற்கொலைகளை தடுக்க அரசுக்கு எந்த அளவுக்கு உள்ளதோ, அதே அளவுக்கு அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைக்க ஆளுனருக்கும் கடமை உள்ளதாக கூறியுள்ளார். இதனை கண்டுகொள்ளாமல் ஆளுனர் இருப்பது வேதனையளிக்கிறது.

ஆன்லைன் சூதாட்டம்! என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை..!!

அதே சமயம் ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை நிறைவேற்றிய பின்னர் கடமை முடிந்து விட்டதாக நினைத்து அரசு அமைதியாக வேடிக்கை பார்க்கக் கூடாது எனவும் ஆளுநரின் ஒப்புதலுக்கு தீவிர முயற்சி எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.