சித்த மருத்துவ பல்கலைக்கழகம் குறித்த சட்ட மசோதாவிற்கு விளக்கம் கேட்டு ஆளுநர் அரசு கடிதம் அனுப்பிய நிலையில் ஓரிரு நாட்களில் தகவல் கொடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் வேந்தராக கொண்டு, சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்க சட்ட மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக சித்த மருத்துவம், ஆயுர்வேதா, யோகா உள்ளிட்ட துறைகளுக்கு தனி பல்கலைக்கழகம் தொடங்க அமைச்சர் மா சுப்பிரமணியன் பேரவையில் சட்ட மசோதா தாக்கல் செய்தார்.
இருப்பினும் சட்ட மசோதா என்பது முதலில் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட பிறகு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஆனால் தற்போது தமிழக முதல்வர் வேந்தராக செயல்படுவது குறித்து விளக்கம் அளிக்க ஆளுநர் மாளிகையில் கேள்வியெழுப்பட்டது.
இந்நிலையில் சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து மீண்டும் ஓரிரு நாட்களில் ஆளுநர் மாளிகைக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.