Connect with us

அண்ணாமலையை விட ஆளுநர் ஆர்.என். ரவிதான் பாஜகவின் உண்மையான மாநில தலைவர் – கே. எஸ் .அழகிரி

அண்ணாமலை

செய்திகள்

அண்ணாமலையை விட ஆளுநர் ஆர்.என். ரவிதான் பாஜகவின் உண்மையான மாநில தலைவர் – கே. எஸ் .அழகிரி

தமிழக பாரதிய ஜனதா கட்சிக்கு இரண்டு மாநில தலைவர்கள் இருக்கிறார்கள் ஒன்று அண்ணாமலை மற்றொன்று ஆளுநர் ரவி.. பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை விளம்பரத்திற்காக எதையும் செய்யக்கூடியவர். அண்ணாமலையை விட ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்பாக செயல்படுகிறார்  என நெல்லையில் காங்கிரஸ் கட்சியின் கே. எஸ் .அழகிரி செய்தியாளர்களை சந்திதார்

காங்கிரஸ் கட்சி ஆட்சி அதிகாரத்தில் இல்லாததாலே தலைவர்கள் விலகிச் செல்கின்றனர் பேரறிஞர் மன்மோகன் சிங் காலத்தில் 9 சதவீதம் பொருளாதார வளர்ச்சி இருந்தது இன்று ஏழு சதவீதத்திற்கு குறைந்து இருக்கிறது.

குலாம் நபி ஆசாத் போன்ற தலைவர்கள் கட்சியிலிருந்து விலகி செல்வதால் காங்கிரஸ் கட்சி சுத்தமடைந்து கொண்டிருப்பதாக கூறியவர்,,

வரும் ஏழாம் தேதி கன்னியாகுமரியில் துவங்கும் ராகுல் காந்தியின் யாத்திரை நான்கு நாட்கள் தமிழகத்தில் நடைபெறுகிறது. இந்த யாத்திரை நாட்டில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

காங்கிரஸ் கட்சியில் தலைவர்கள் இல்லை என்ற கருத்து தவறானது. சோனியா காந்தியை கட்சியின் தலைவராக இருக்கிறார்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top