தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 5 மணிக்கு சென்னையில் இருந்து கவர்னர் விமானம் மூலம் மதுரைக்கு சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கிருந்து காரில் ராமநாதபுரம் வந்து ராமேஸ்வரம் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பகல் 11.30 மணியளவில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் உரையாடியுள்ளார் .
இன்று மாலை தேவிபட்டினத்தில் உள்ள மீனவர்களையும், எட்டிவயலில் விவசாயிகளையும் சந்திக்க உள்ளார்.
தமிழ்நாட்டில் தொட்டில் குழந்தை திட்டம் – 5,928 குழந்தைகள் ஒப்படைப்பு
புதன்கிழமையன்று அவர் பரமக்குடியில் உள்ள பிரபல தலைவர்களான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடங்களுக்கும், தலித் தலைவர் இம்மானுவேல் சேகரன் நினைவிடத்துக்கும் சென்று அஞ்சலி செலுத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.