ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி திடீர் பயணம்: பின்னணி என்ன?

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை 2 நாள் பயணமாக காலை 10.30 மணிக்கு டெல்லி செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை 7.30 மணிக்கு டெல்லி புறப்படுவதாக இருந்தது. ஆனால் பயணத்தில் மாற்றம் ஏற்பட்டு, மீண்டும் காலை 10.30 மணிக்கு டெல்லி புறப்படுகிறார்.

கனமழை! எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை தெரியுமா?

இந்நிலையில் இன்று, நாளை டெல்லி பயணம் மேற்கொண்டுள்ள ஆளுநர் மத்திய அமைச்சர்களை சந்திக்க இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறக் கோரி குடியரசு தலைவருக்கு திமுகவினர் மனு அனுப்ப திட்டமிடப்பட்ட நிலையில், ஆளுநரின் இத்தகைய பயணமானது முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment