BIG BREAKING: ஆன்லைன் ரம்மி தடை மசோதா: ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்!

ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

3 மாதம் சிறை: 

சட்டமன்றத்தில் 2வது முறையாக மசோதா நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்ட நிலையில் ஒப்புதல் அளித்துள்ளார்.

ஆன்லைனில் ரம்மி விளையாடினால் 3 மாதங்கள் சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளதோடு, ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது 3 மாத சிறை தண்டனை, அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லை ரம்மி மசோதா: 

தமிழ்நாட்டில் இதுவரை ஆன்லைன் ரம்மி தடை மசோதாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாகி வந்த நிலையில், இதனை தடை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் முதல் அரசியல் கட்சியினர் வரை கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனையடுத்து அதிமுக ஆட்சி காலத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை விதித்து மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்த மசோதாவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இதன் தொடர்ச்சியாக 2022ம் ஆண்டு திமுக ஆட்சி அமைத்ததையடுத்து அக்டோபர் 19 ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நிறைவேற்றபட்டு ஆர்.என்.ரவிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால் அனுப்பப்பட்ட ஆன்லைன் ரம்மி சட்டமசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். இதையடுத்து அக்டோபர் 26 ஆம் தேதியே ஆளுநர் ஒப்புதலுக்காக மீண்டும் மசோதா அனுப்பிவைக்கப்பட்டது. 131 நாட்கள் கழித்து கடந்த மார்ச் 6 ஆம் தேதி ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பினார்.

2வது முறையாக மசோதா நிறைவேற்றம்: 

8 கேள்விகளுக்கு பதிலளிக்கக் கோரியும், தெளிவான காரணங்களை விளக்கக்கோரியும் மசோதாவை ஆளுநர் மாளிகை திருப்பி அனுப்பியது. ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். சட்டமன்றத்தில் 2ஆவது முறையாக மசோதா நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்ட நிலையில் ஒப்புதல் அளித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.