2022-ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம்: வணக்கம் வணக்கம் என்று கூறி தொடங்கி வைத்தார் ஆளுநர் ரவி!

2022ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்றைய தினம் தொடங்கி உள்ளது. திட்டமிட்டபடி புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற இருந்த சட்டப்பேரவை கூட்டம் இடமாற்றம் செய்யப்பட்டு மீண்டும் கலைவாணர் அரங்கத்தில் தொடங்கியுள்ளது. ஏனென்றால் தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகமாக உள்ள காரணத்தால் சென்னை கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறுகிறது.

kalaivanar arangam

இந்த சட்டப் பேரவைக் கூட்டத்தில் தமிழகத்தில் ஆளுநர் ரவி தொடங்கி வைப்பார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை தொடங்கிய சட்டப்பேரவையில் ஆளுநர் என்ற  வணக்கம் என்று கூறி தனது உரையை தொடங்கினார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனது முதல் முறையாக உரையாடுவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் அவர் கூறினார்.

இரண்டாவது அலையை கட்டுப்படுத்துவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் ரவி பாராட்டு அளித்திருந்தார். தடுப்பூசி செலுத்துவதில் இந்தியாவுக்கே தமிழகம் முன்மாதிரியாக உள்ளது என்றும் ஆளுநர் பெருமிதம் கொண்டிருந்தார். தமிழ்நாட்டில் இதுவரை 8.55 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

தமிழ்நாட்டில் சிறார்களுக்கான தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது என்று  ஆளுநர் ரவி கூறினார். தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் ஒமைக்ரான் கண்டறியப்பட்டது என்றும் அவர் கூறினார்.

இந்தியாவிலேயே ஒமைக்ரான்  பரிசோதனை நடத்தும் ஆய்வகம் முதன் முதலில் தமிழ் நாட்டில் தான் அமைந்தது என்றும் கூறினார். தமிழ்நாட்டில் 86.95 சதவீதம் முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் ஆளுநர் ரவி கூறினார். கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து அரசு தமிழ்நாடு அரசு நிதியுதவி செய்துள்ளது என்றும் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment