Connect with us

ஆர்.எஸ்.எஸ்.பேச வேண்டியதை எல்லாம் ஆளுநர் ரவி பேசுகிறார் – கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

RN Ravi

தமிழகம்

ஆர்.எஸ்.எஸ்.பேச வேண்டியதை எல்லாம் ஆளுநர் ரவி பேசுகிறார் – கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

மக்கள் ஒற்றுமை மற்றும் இந்திய வளமை ஆகியவற்றை மையப்படுத்தி வருகிற 7ம்தேதி முதல் 10 ம்தேதி வரை காங்கிரஸ் கட்சி சார்பில் பாரத் ஜோடா யாத்திரை காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நடைபெற உள்ளது. இதனை ராகுல் காந்தி துவக்கி வைக்கிறார். இந்த யாத்திரையில் திரளான காங்கிரஸ் கட்சியினரை பங்கேற்க வைப்பது குறித்த ஆலோசனை கூட்டம் விருதுநகர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு முன் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.கே.எஸ்.அழகிரி. செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது

குலாம் நபி ஆசாத்தின் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பழுத்த மட்டை மரத்திலிருந்து தானாகவே கீழே விழும் அது இயற்கை அது போல் தான் 100% சரியான சிஸ்டம் உலகத்தில் கிடையாது இவ்வளவு காலம் குறை தெரியாமல் தற்போது மற்றும் குறை தெரிவது எப்படி?
இவ்வளவு காலம் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது அதனுடைய பலன்களை அவர்கள் அனுபவித்தார்கள்.

இன்று அனுபவிக்க ஒன்றும் இல்லை அந்த மரம் பழுக்கவில்லை. பழுத்த வரை பறவைகள் தங்கி இருந்தன. மரம் பழுக்கவில்லை பறவைகள் பறந்து ஓடி விட்டன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top