மணிப்பூர் மாநிலத்தில் இன்று காலை முதல் இரு பிரிவினருக்கிடையே கலவரம் மூண்டுள்ள நிலையில் கலவரக்காரர்களை கண்டவுடன் சுடுங்கள் என அம்மாநில ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மணிப்பூரில் உள்ள ஒரு சில குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் தங்களை பட்டியல் இனத்தில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதற்கு பழங்குடியின மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் அந்த குறிப்பிட்ட சமூகத்தினருக்கும் பழங்குடியினருக்கும் மோதல் ஏற்பட்டதை அடுத்து அந்த மோதல் தற்போது வன்முறையாக மாறி உள்ளது.
மணிப்பூரில் உள்ள ஏழு மாவட்டங்களில் இந்த வன்முறை வெடித்ததாகவும் ஏராளமான வாகனங்கள் மற்றும் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தமிழர்கள் வாழும் பகுதியில் தீ வைக்கப்பட்டது என்றும் 25 தமிழர்கள் தங்கள் வீடுகளை இழந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மணிப்பூரில் நிலைமை என்ன கட்டுக்கடங்காமல் போனதை அடுத்து எட்டு மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதாகவும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் மணிப்பூர் மாநிலம் முழுவதும் இணைய சேவை துண்டிக்கப் பட்டுள்ளதாகவும் சட்டம் ஒழுங்கை சரிசெய்ய ராணுவத்தினர் களம் இறக்கப்பட்ட தாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் உள்ள நிலவரம் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆளுநரிடம் கேட்டு தெரிந்ததாகவும் கலவரத்தை ஒடுக்குவதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்க அவர் அனுமதி அளித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கலவரம் தொடர்ந்து நீடிக்க பட்டு வருவதை அடுத்து கலவரக்காரர்களை கண்டவுடன் சுட்டுத்தள்ள ராணுவத்தினருக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். இதனால் மணிப்பூர் மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.