நேற்றைய தினம் அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 5% ஊதியம் உயர்வு அளிக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதனால் அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள், டிக்கெட் பரிசோதகர்கள் உள்ளிட்ட பலருக்கும் ஊதிய உயர்வு கிடைத்துள்ளது.
மேலும் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு பற்றி பேச்சுவார்த்தை நடத்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் திடீரென்று போக்குவரத்து தொழிலாளர்கள் இரண்டாவது நாளாக ஆர்ப்பாட்டத்தை செய்து வருவது பெரும் குழப்பத்தை உண்டாக்கி உள்ளது.
அதன்படி சென்னையில் வடபழனி, அண்ணாநகர் உள்ளிட்ட பணிமனைகளில் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் இரண்டாவது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சு வார்த்தையை வழக்கம்போல் மூன்றாண்டுக்கு ஒரு முறை நடத்த வலியுறுத்தி அவர்கள் இரண்டாவது நாளாக ஆர்ப்பாட்டத்தில் உள்ளனர். இதனால் நேற்றைய தினம் கூறிய அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தான் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர் என்பது தெரியுது தெரிகிறது.