Connect with us

அரசு வேலை வழங்க வேண்டும் தமிழக அரசை எச்சரிக்கும் எச்.ராஜா

h.raja

தமிழகம்

அரசு வேலை வழங்க வேண்டும் தமிழக அரசை எச்சரிக்கும் எச்.ராஜா

குவைத் நாட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட முத்துக்குமரன் மனைவிக்கு அரசு வேலை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறினார்.

பாஜக மூத்த தலைவர் எச். ராஜா முத்துக்குமரனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளரை சந்தித்து கூறியது , குவைத் நாட்டிற்கு வேலைக்குச் சென்ற முத்துக்குமரன் ஈவு இரக்கமின்றி இரும்பு கம்பிகளால் தாக்கப்பட்டு துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். இந்த மோசமான நடவடிக்கையை பாஜக வன்மையாக கண்டிக்கிறது.

முத்துக்குமரன் வீட்டிற்கு ஒரே பிள்ளை என்பதாலும், அவரது மனைவி பட்டப்படிப்பு படித்துள்ளதாலும், தமிழக அரசு முத்துக்குமரனின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

முத்துக்குமரன் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தி குவைத் நாட்டில் உள்ள பத்திரிகைகளில் வெளியாகி உள்ளது. அதன் அடிப்படையில் அவருக்கு வேலை அளித்த உரிமையாளருக்கு உரிய உச்சபட்ச தண்டனை பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top