800 செவிலியர்களுக்கு விரைவில் அரசுப்பணி – அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி !!
தமிழகத்தில் கொரோனா என்னும் கொடிய வைரஸ் ஆட்டிப்படைத்து வந்தது. இந்த இக்கட்டான சூழலில் செவிலியர்களின் பங்கு முக்கியமானதாக அமைந்துள்ளது. இந்த காலக்கட்டத்தின் தமிழகத்தில் 2,000 செவிலியர்கள் பணிபுரிந்து வந்தனர். இவர்களில் 1,000க்கும் மேற்பட்ட செவிலியர்களுக்கு மாற்றுப்பணி வழங்கப்பட்டது.
ஆனால் 800 செவிலியர்களுக்கு அரசுப்பணி வழங்குவது கேள்விகுறியாகியுள்ளது. இந்நிலையில் கொரோனா காலத்தில் பணிபுரிந்த 800 செவிலியர்களுக்கு விரைவில் அரசுப் பணி வழங்க நடவடிக்கைகள் எடுப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே கொரோனா காலக்கட்டத்தில் பணிபுரிந்த அனைத்து செவிலியர்களுக்கும் அரசு பணி வழங்கப்படுவதாக முதல்வர் கூறிய நிலையில் தற்போது அனைத்து செவிலியர்களுக்கும் அரசு பணி வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் கூறியுள்ளார்.
இதனையடுத்து கொரோனா காலக்கட்டத்தில் பணிபுரிந்த அனைத்து செவிலியர்களுக்கு வருகின்ற காலங்களில் அரசு பணியில் முன்னுரிமை வழங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
மேலும், கொரோனா காலக்கட்டத்தில் பணிபுரிந்த செவிலியர்களுக்கு மீண்டும் அரசு பணி வழங்கக்கோரி போராட்டம் நடைபெற்ற நிலையில் தற்போது அமைச்சர் கூறியிருப்பது நிம்மதி அடைய செய்கிறது.
