நாளுக்கு நாள் புதுப்புது கண்டுபிடிப்புகள் உருவாகிக் கொண்டே வருகின்றன. அவற்றுள் ஒன்றுதான் சிசிடிவி கேமராக்கள். சிசிடிவி கேமராக்கள் பல குற்றங்கள் நிகழ்ந்த இடத்தில் துல்லியமாக குற்றவாளிகளை கண்டுபிடிக்க பயன்படுத்தப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் இது ஒரு கண்காணிப்பு கருவியாகவே காணப்படுகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் பெரும்பாலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனை போல் அரசு பள்ளி வளாகங்களிலும் செலுத்த வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பள்ளி வளாகங்களில் சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்க நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமணஞ்சேரியில் அரசு உயர்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்து தர உத்தரவிடக் கோரிய வழக்கில் இத்தகைய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. சமூக விரோத செயல்களில் இருந்து பள்ளிக்கூடத்தை பாதுகாக்க உத்தரவிடக் கோரிய வழக்கில் ஐகோர்ட் கிளை இத்தகைய உத்தரவினை பிறப்பித்துள்ளது.
அரசு பள்ளிகளில் அடிப்படை வசதி ஏற்படுத்தக்கூறிய உத்தரவில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை கறம்பக்குடியை சேர்ந்தவர் தொடர்ந்த வழக்கில் விசாரணையை மூன்று வாரத்திற்கு ஒத்தி வைத்தது ஐகோர்ட் கிளை.