Connect with us

அரசு பள்ளிகளில் சாதி பாகுபாடு… அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை!!

anbil 1200

தமிழகம்

அரசு பள்ளிகளில் சாதி பாகுபாடு… அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை!!

தென்காசி மாவட்டம் பாஞ்சாகுளம் பள்ளியில் படிக்கும் மாணவர்களை ஆசிரியர்கள் சாதி பாகுபாடு பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இத்தகைய சம்பவமானது தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இத்தகைய சம்பவங்கள் குறித்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழுவினர் கண்காணிக்க வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.

அதே போல் சாதி பாகுபாடு குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் காலாண்டு தேர்வில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வினாத்தாள்கள் மாவட்டம் தோறும் வெவ்வேறாக இருக்கும் என தெரிவித்தார்.

அதே போல் மாணவர்களுக்கு சிற்றுண்டி திட்டமானது 1 முதல் 5 வகுப்புகள் வரை தொடங்கப்பட்ட நிலையில் மற்ற மாணவர்களுக்கு தமிழக முதல்வர் விரைவில் அறிவிப்பை வெளியிடுவார் என கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top