News
பொது அறிவு திறனில் சாதனை படைக்கும் அரசு தொடக்கப்பள்ளி! – தமிழக ஆளுநர் வாழ்த்து
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த க. பரமத்தி ஒன்றியத்திற்கு உட்பட்ட தொட்டியபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தனியார் பள்ளியை மிஞ்சும் அளவிற்கு வளர்ச்சி அடைந்து செயல்பட்டு வருகிறது.
50 ஆவது ஆண்டு நிறைவாக இப்பள்ளியில் ஆங்கிலவழிக் கல்வி ஆரம்பிக்கப்பட்டது. தற்பொழுது இப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மொத்தம் 68 மாணவர்கள் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் கொண்டு செயல்பட்டு வருகிறது. இங்கு பயிலும் மாணவர்கள் பொது அறிவில் சிறந்து விளங்குகின்றனர்.

எடுத்துக்காட்டாக 140 தமிழக வாகன எண்கள், மாநிலங்களின் தலைநகர் பெயர் மற்றும் கல்வி இணைச் செயல்பாடுகள் 60 தமிழ் வருடங்கள், 148 தமிழக நகராட்சிகள் பெயர்களை மனப்பாடமாக தெளிவாக வாசித்து அசத்துகின்றனர்.
மேலும் பள்ளியில் மாணவர்களுக்கு தேர்தல் மற்றும் மாணவர் செல்ல பெயர் சூட்டு விழா, புதிய மாணவர் வரவேற்பு விழா, பாரதி கவிதை மன்றம், டாக்டர் அப்துல் கலாம் அறிவியல் மன்றம், கராத்தே, சிலம்பம் போன்ற போட்டிகளில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்று பல பரிசுகளை வென்றுள்ளனர்.
மேலும் காமராஜர் விருது, ரோட்டரியின் தூய்மைப் பள்ளிக்காண விருதுபோன்ற விருதுகளை இப்பள்ளி பெற்றுள்ளது. இதுபோன்ற செயல்களால் இப்பள்ளி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் பாராட்டு பெற்றது. மேலும் பள்ளியில் மாணவர்களின் திறமைகளை பாராட்டி தமிழக ஆளுநர் அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.
