
Tamil Nadu
அரசு பள்ளி மாணவர்கள் ஆங்கிலம் பேசுவதற்கு சிரமப்படக் கூடாது !! கூகுள் உடன் முதல்வர் ஒப்பந்தம் …
அரசு பள்ளி மாணவர்கள் எளிதாக ஆங்கிலம் பேச படிக்க Google Read Along என்ற செயலியை அமல்படுத்துவதற்காக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் கட்டப்பட்ட கட்டடங்களை முதலமைச்சர் காணொளி வாயிலாக திறந்து வைத்ததோடு நூல்களையும் வெளியிட்டார்.
இந்நிலையில் 181 கோடியே 3 லட்சத்து 94 ஆயிரம் செலவில் கடலூர் திண்டுக்கல் ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள 208 அரசு பள்ளி கட்டடங்கள் அவற்றைத் திறந்து விட்டனர்.
மேலும் முத்தமிழ் அறிஞர் மொழிபெயர்ப்பு திட்டம், திசை தோறும் திராவிடம், இளந்தளிர் இலக்கிய திட்டங்களின் கீழ் பல நூல்களை முதலமைச்சர் வெளியிட்டார்.
இதனை தொடர்ந்து அரசு பள்ளி மாணவர்கள் எளிதாக ஆங்கிலம் பேச படிக்க கூகுள் Google Read Along என்ற செயலியை திறந்துவைத்து கூகுள் நிறுவனத்துடன் முதல்வர் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
