நெல்லை: துப்புரவுப்பணியில் அரசுப் பள்ளி மாணவிகள்!!!

நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியில் அரசு மேல்நிலை மகளிர் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளியில் சுமார் 475 மாணவிகள் பயின்று வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பள்ளியில் துப்புரவுப்பணி , ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப படாமல் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தினமும் மாணவிகள் 4 பேர் வகுப்பறைகளை சுத்தம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளதாக தெரிகிறது.

இந்த சூழலில் பள்ளி தலைமை ஆசிரியம், மாவட்ட கல்வி அலுவலக அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் கொடுத்தும், தற்போது வரையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

மேலும், துப்புரவுப்பணியில் மாணவர்களை ஈடுப்படுத்தக்கூடாது என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.