Connect with us

அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஜோரான செய்தி; ஆலோசனை மையம் அமைக்க அரசாணை வெளியீடு!

மாணவர்

தமிழகம்

அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஜோரான செய்தி; ஆலோசனை மையம் அமைக்க அரசாணை வெளியீடு!

அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஜோரான செய்தி; ஆலோசனை மையம் அமைக்க அரசாணை வெளியீடு!

நம் தமிழகத்தில் நாள்தோறும் புதுப்புது திட்டங்களை அமல் படுத்தப்பட்டு வருகிறது. அவை பொதுமக்களுக்கு மிகவும் பிரயோஜனம் அளிப்பதாக காணப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல் மாணவர்களுக்கும் தமிழக அரசு பல முக்கிய அறிவிப்புகளையும் திட்டங்களையும் அறிவிப்பு வெளிப்படுத்திக் கொண்டே வருகிறது.

இந்த நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மற்றொரு சிறந்த திட்டத்தினை அரசு பள்ளி மாணவர்களுக்கு அமல்படுத்த உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆலோசனை மையம் அமைக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு அவர்களின் முன்னாள் மாணவர்களை கொண்டு ஆலோசனை மையம் அமைக்க முடிவெடுக்கப்பட்டது.

ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்து வழிகாட்டல்களை வழங்க இந்த ஆலோசனை மையம் உதவிகரமாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆலோசனை மையம் அமைக்க ரூ 3.08 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top