Connect with us

சீமை கருவேலமரங்களை அகற்ற மத்திய அரசு நிதி ஒதுக்க மறுப்பு! சீமை கருவை இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும்!!

karuvela maram

செய்திகள்

சீமை கருவேலமரங்களை அகற்ற மத்திய அரசு நிதி ஒதுக்க மறுப்பு! சீமை கருவை இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும்!!

சீமை கருவேலமரங்களை அகற்ற மத்திய அரசு நிதி ஒதுக்க மறுப்பு! சீமை கருவை இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும்!!

மரம்தான் மழை நீருக்கு ஆதாரம் என்பதுதான் உண்மை,ஆனால் சீமை கருவேல மரங்கள் விஷயத்தில் அப்படி அல்ல. ஏனென்றால் சீமை கருவேல மரங்கள் அதிக அளவு நிலத்தடி நீரை உறிஞ்சும் தன்மை கொண்டவை. இதனை அகற்ற தமிழக அரசு அதிக முயற்சி செய்து வருகிறது.

இருப்பினும் சீமை கருவேல் மரங்களை அகற்ற மத்திய அரசு நிதி ஒதுக்க மறுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி சீமை கருவை மரங்களை அகற்ற ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் நிதி ஒதுக்க மத்திய அரசு மறுப்பு தெரிவித்ததாக தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.

சீமை கருவை மரங்களை அகற்ற மாநில அரசின் நிதியை பயன்படுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு தரப்பு கூறியுள்ளது. 60 ஆயிரத்திற்கு மேற்பட்ட சீமை கருவை மரங்கள் அகற்றம் மற்றும் வேருடன் அகற்ற திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளது.

சீமை கருவை மரங்களை விறகாகவும் செங்கல் சூளையில் எரிபொருளாகவும் பயன்படுத்தப்படுகின்றன என்று தமிழக அரசு கூறியுள்ளது. பசுமைகாகவும் வாழ்வாதாரத்துக்காகவும் மட்டுமே சீமை கருவை மரங்கள் வளர்க்கப்பட்டன என்றும் நிபுணர் குழு கூறியுள்ளது.

சீமைக் கருவை மரங்கள் இலைகளை கால்நடைகள் அதிகளவில் உட்கொண்டால் மட்டுமே பாதிப்பு ஏற்படும் என்றும் கூறியுள்ளது. இந்த நிலையில் நீதிபதிகள் நிலத்தடி நீர், சுற்றுச்சூழல் பாதிப்பை கருத்திற்கொண்டு சீமை கருவை இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் என்று நீதி கூறியுள்ளனர். தமிழகத்தில் சீமை கருவை மரங்களை அகற்ற கோரிய வழக்கை மார்ச் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top