
Tamil Nadu
இனி நகர்ப்புறங்களிலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்-முதலமைச்சர் அறிவிப்பு;
2011ஆம் ஆண்டு தொடங்கி 2021 ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடைபெற்றது. இந்த நிலையில் 10 ஆண்டுக்கு பின்பு 2021 ஆம் ஆண்டு திமுக வெற்றி பெற்றது. இந்த நிலையில் நம் தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இன்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு விதமான அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதன்படி ரூபாய் 150 கோடியில் சென்னை உட்பட 25 மாநகராட்சிகளில், 63 நகராட்சிகளில் 708 நகர்ப்புற மருத்துவ நிலையங்கள் அமைக்கப்படும் என்று கூறினார். கிராமங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் போன்று நகர்ப்புறங்களிலும் அமையும் என்று முதலமைச்சர் கூறினார்.
மேலும் தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் கூறினார். 234 தொகுதிகளிலும் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் மக்களின் கோரிக்கைகள் குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். 234 தொகுதிகளிலும் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் எனது நேரடி கண்காணிப்பில் செயல்படுத்தப்படும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.
