தொடரும் அலட்சியப் போக்கு.. உயிரோடு இருக்கும் நபரை இறந்தவராகப் பதிவேற்றம் செய்த அரசு அதிகாரிகள்!

அரசாங்க ஊழியர்களின் அலட்சியம் குறித்த செய்திகள் நாம் அவ்வப்போது கேட்டும் படித்தும் வருகிறோம்.

அந்தவகையில் அரியலூர் மாவட்டத்தில் ஒரு முதியவர் இறந்துவிட்டதாக அதிகாரிகள் பதிவேட்டில் ஏற்ற அவர் உதவித்தொகை பெற முடியாமல் போராடி வருகிறார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள முத்துவாஞ்சேரி என்ற ஊரில் 72 வயது மதிக்கத்தக்க கோவிந்தன் முதியோர் ஓய்வூதிய உதவித் தொகை பணத்தை எடுக்கச் சென்றபோது கைரேகை பதிவு ஆகாமல் போக பணத்தை எடுக்க முடியவில்லை.

கோவிந்தன் இதற்கான காரணத்தை வங்கி மேலாளரிடம் கேட்க, கோவிந்தன் இறந்து விட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர் வங்கித் தரப்பில்.

இந்த விஷயத்தால் ஷாக்கான கோவிந்தன் செய்வதறியாது நிற்க உயிருடன் இருப்பதற்காக சான்றிதழை விஏஓவிடம் வாங்கிவரக் கூறியுள்ளது வங்கித் தரப்பு.

கோவிந்தன் உடனடியாக விஏஓவிடம் உயிரோடு இருப்பதை நிரூப்பிக்கும் வகையில் வாழ்நாள் சான்றிதழ் கேட்டுப் பெற்று அதனை வங்கியில் ஒப்படைக்க வங்கி தரப்பு தாசில்தாரிடம் வாழ்நாள் சான்றிதழைப் பெற்று வருமாறு கூறியுள்ளது.

அதன்பின்னர் கோவிந்தன் தாசில்தார் அலுவலகத்தில் சான்றிதழ் பெற மனுக் கொடுத்துள்ளார்.

உயிருடன் இருக்கும் நபர் இறந்தவராகப் பதிவேற்றம் செய்யப்பட்ட அரசு அதிகாரிகள் குறித்தும், முதியவரை விஏஓ அலுவலகம், தாசில்தார் அலுவலகம் என அலைக்கழிக்கும் வங்கி அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கூறி வருகின்றனர்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.