Connect with us

இந்திய மருத்துவ மாணவர்களுக்கு உக்ரைன் அரசு சிறப்பு சலுகை!!-மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தகவல்..

ukraine tamil students

News

இந்திய மருத்துவ மாணவர்களுக்கு உக்ரைன் அரசு சிறப்பு சலுகை!!-மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தகவல்..

இந்திய மருத்துவ மாணவர்களுக்கு உக்ரைன் அரசு சிறப்பு சலுகை!!-மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தகவல்..

உக்ரைனில் படித்துவரும் இந்திய மாணவர்களுக்கு உக்ரைன் அரசு சிறப்பு சலுகைகள் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்களவையில் உக்ரைன் சூழல் குறித்து விவாதம் நடைபெற்று வந்தது. இந்த விவாதத்தின்போது வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதில் அளித்தார்.

குறிப்பாக உக்ரைன் – ரஷ்யா போர் சூழல் காரணமாக அந்நாட்டில்  படித்துவரும் மருத்துவ மாணவர்களில் படிப்பு கேள்விகுறியாகி உள்ளது. இதற்கு மத்திய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.

இதற்கு பதில் அளித்து பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இந்திய மருத்துவ மாணவர்களுக்கு ஓராண்டு சலுகைகள் வழங்குவதற்கு உக்ரைன் அரசு முடிவு செய்திருக்கிறது என்ற தகவலை வழங்கியுள்ளார்.

அதாவது கேஆர்ஓகே  என்ற தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அடுத்த ஆண்டிற்கு செல்ல முடியும். இந்நிலையில் தற்போது நிலவி வரும் சூழலால் இந்தத் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டதாக கூறினார்.

இதன் மூலம் மாணவர்கள் தேர்வு எழுதாமலேயே அடுத்த வகுப்பிற்கு செல்லமுடியும் என்ற கருத்தினை  முன் வைத்தார். இந்த செய்தி உக்ரைனில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக அமைந்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in News

To Top