Connect with us

ஸ்கூல் லீவ் தான்.. ஆனா சத்துணவு முட்டையை போய் வாங்கிக்கோங்க. தமிழக அரசு உத்தரவு!

Untitled 73

செய்திகள்

ஸ்கூல் லீவ் தான்.. ஆனா சத்துணவு முட்டையை போய் வாங்கிக்கோங்க. தமிழக அரசு உத்தரவு!

ஸ்கூல் லீவ் தான்.. ஆனா சத்துணவு முட்டையை போய் வாங்கிக்கோங்க. தமிழக அரசு உத்தரவு!

கடந்த மூன்று ஆண்டுகளாக நாம் காதுகளில் அதிக அளவில் கேட்கும் வார்த்தைகளாக இருப்பது கொரோனாத் தொற்று, கொரோனா ஊரடங்கு, சானிடைசர், மாஸ்க், வொர்க் ஃப்ரம் ஹோம் மற்றும் ஆன்லைன் வகுப்பு.

ஆன்லைன் வகுப்பு முடிந்து சில மாதங்கள் மட்டும் நேரடியான வகுப்புகளுக்கு மாணவர்கள் சென்ற நிலையில் கொரோனாத் தொற்று பரவல் மீண்டும் உச்சம் எடுத்தது.

அதனைத் தொடர்ந்து கொரோனாத் தொற்றால் மாணவர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படாமல் இருக்க தமிழக அரசு மாணவர்களுக்கு மீண்டும் ஆன்லைன் வகுப்பு முறையினை அமலுக்குக் கொண்டு வந்தது.

அதனைத் தொடர்ந்து 1 முதல் 12 ஆம் வகுப்புகள் வரையிலான மாணவர்களுக்கு 31 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை நாட்களிலும் மாணவர்கள் உடல் நலத்துடன் இருப்பதை நோக்கமாகக் கொண்டு அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு சத்துணவு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதாவது 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரிசி, பருப்பு மற்றும் 5 முட்டைகளை வாரம் ஒரு முறை என்ற கணக்கில் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top