பெண் குழந்தைகளுக்கான அறிவிப்பு: பத்தாம் வகுப்பு வரை பெண் கல்வி ஊக்கத்தொகை நீட்டிப்பு!- தமிழக அரசு உத்தரவு;

அடுப்பூதும் பெண்ணுக்கு படிப்பெதற்கு என்ற காலம் மாறி அனைத்து துறைகளிலும் பெண்களே ஆண்களை மிஞ்சும் அளவிற்கு உயர்ந்து உள்ளனர். அவர்களின் வளர்ச்சிக்கு உதவும் படி தமிழக அரசும் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது.

இதன்படி பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிப்பதற்காக நம் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை எடுத்து வருகிறது. இந்த நிலையில் கிராமப்புற பெண் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் பத்தாம் வகுப்பு வரை நீட்டித்து தமிழக அரசு அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.

மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவிகளுக்கு ரூபாய் 500 வழங்கப்படும் என்று கூறியுள்ளது. ஆறாம் வகுப்பு பயிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவிகளுக்கு ரூபாய் ஆயிரம் கல்வி உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.

இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த ஊக்க தொகை வழங்க அஞ்சல் சேமிப்பு கணக்கு பதிலாக வங்கிகளில் வைப்பு நிதி கணக்கில் செலுத்தப்படும் என்றும் கூறியுள்ளது.

எனவே ஒவ்வொரு மாணவியரும் தனித்தனி வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. பெற்றோரின் ஆண்டு வருமானம் 72 ஆயிரத்துக்கும் குறைவாக உள்ள குடும்பங்களில் பெண்களுக்கு மட்டுமே இந்த ஊக்கத்தொகை பொருந்தும் என்றும் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment