News
10, 12ஆம் வகுப்பு தேர்வுக்கான ஆயத்தப் பணிகளை தொடங்க தமிழக அரசு அனுமதி
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டு 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என சமீபத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்து இருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் 10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுக்கான ஆயத்தப் பணிகளை தொடங்குமாறு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து அதிகாரபூர்வ அரசாணையை ஒன்றையும் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இதனை அடுத்து பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பெயர் பட்டியலை தயாரிப்பதற்கான பணி தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மாணவர்களை பள்ளிக்கு நேரில் வரவழைத்து விவரங்களைப் பெறவும் பொதுத் தேர்வுக்கான கட்டணத்தை வசூலித்து கொள்ளவும் அந்த ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது
இந்த நிலையில் மாணவர்களை எவ்வாறு நேரில் அழைக்கும் போது ஒரு மணி நேரத்திற்கு 20 மாணவர்களை மட்டுமே அழைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கொரோனா கட்டுப்பாடு பகுதியில் வசிப்பவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேறு ஒரு நாளில் அழைப்பு விடுக்கலாம் என்றும் அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது
