நேற்றைய தினம் முதலே தமிழகத்தில் தொடர்ந்து விருதுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. அதிலும் குறிப்பாக காவல்துறையினர் தீயணைப்பு துறையினருக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில் இன்றைய தினம் தமிழகத்தில் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
இது மாட்டுப்பொங்கல் மட்டுமில்லாமல் திருவள்ளுவர் தினமும் இன்றைய தினம் கொண்டாடப்படுகிறது. இதற்காக தமிழகத்தில் தமிழக அரசின் சார்பில் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2022 ஆம் ஆண்டுக்கான பெருந்தலைவர் காமராஜர் விருது குமரி அனந்தனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது.
காமராஜருடன் இணைந்து பணியாற்றிய தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவர் குமரிஅனந்தன் என்று தமிழக அரசு கூறியுள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கான அய்யன் திருவள்ளுவர் விருது மீனாட்சி சுந்தரத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது.
பெங்களூரில் திருவள்ளுவர் சிலையை திறப்பதற்கு முதன்மையானவர்களுள் ஒருவர் மீனாட்சிசுந்தரம் என்றும் கூறியுள்ளது. விருதுபெறும் விருதாளர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் வழங்கப்படும். அதோடு மட்டுமில்லாமல் ஒரு சவரன் தங்கம் பதக்கம், தகுதியுரை வழங்கப்படும் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.