Connect with us

டாஸ்மாக்கை மூடும் வகையில் தமிழ்நாடு அரசின் அதிரடி அறிவிப்பு!

tea tasmac

தமிழகம்

டாஸ்மாக்கை மூடும் வகையில் தமிழ்நாடு அரசின் அதிரடி அறிவிப்பு!

டாஸ்மாக்கை மூடும் வகையில் தமிழ்நாடு அரசின் அதிரடி அறிவிப்பு!

டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அதனை மூட வழி செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

அதன்படி தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில் மதுக்கடைகளை திறப்பது தொடர்பாக ஆட்சியர்களுக்கு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் டாஸ்மாக் கடைகள் அமைக்கப்படும் பகுதிகளில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அதனை மாவட்ட ஆட்சியர்கள் பரிசீலிக்க வேண்டும் என்றும் மக்களின் எதிர்ப்புகளை பரிசீலித்து தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்காமல் மதுக்கடைகளை திறக்க கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், ஆட்சியர்களிம் முடிவை எதிர்த்து 30 நாட்களுக்குள் மதுவிலக்கு ஆயத்தீர்வை ஆணையர் மேல்முறையீடு செய்யவும் சட்டத்தில் திருத்தத்தில் இடம் பெற்றுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top