அதிகாரிக்கு தெரியாமல் ஆக்கிரமிப்பா? ஆக்கிரமிப்பு அதிகரிப்பதால் அரசு நிலம் சுருங்குகிறது..!!

தமிழகத்தில் பல இடங்களில் அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அரசுக்கு பல்வேறு விதமான அறிவுறுத்தல்களை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அறிவித்துக் கொண்டு வருகின்றனர்.

அதுவும் குறிப்பாகபெத்தேல் நகரில் பல பகுதிகள் ஆக்கிரமிப்பு செய்ததாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனால் அங்குள்ள மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் அரசு நிலங்களை பாதுகாப்பது வருவாய்த் துறையின் கடமை என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர் .

ஆக்கிரமிப்புகளை தடுக்காதல் அரசு நிலங்களின் பரப்பு சுருங்கி வருகிறது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கூறினர். ஆக்கிரமிப்பு போன்ற சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபோருக்கு நீதிமன்றம் ஒருபோதும் உதவாது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.

மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை நத்தம் புறம்போக்கு நிலமாக மாற்றம் செய்த ஆட்சியரின் உத்தரவு செல்லாது என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறினர். அதிகாரிகளுக்கு தெரியாமல் ஆக்கிரமிப்பு நடந்து இருக்காது என்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கூறியுள்ளது. பட்டா கோரி பெத்தேல் நகர் குடியிருப்போர் நலச்சங்கம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment