நெல்லுக்கு புதிய குறைந்தபட்ச ஆதார விலையை தமிழக அரசு நிர்ணயித்தது இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய அரசு 2022- 2023 ஆண்டு பருவத்திற்கான குறைந்தபட்ச விலையாக குவிண்டாலுக்கு ரூ. 2015 என்றும், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2160 நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் இருக்கும் விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் நெல் மூட்டைகளுக்கான ஆதார் விலையினை அதிகப்படுத்தி இருப்பதாக தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
அதன் படி, சாதாரண நெல் குவிண்டாலுக்கு ரூ.75 ரூபாயும், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு கூடுதலாக ரூ.100 ஊக்கத்தொகை வழங்க தமிழ்நாடு அரசு ஆணையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
அதோடு இத்தகைய சிறப்பம்சங்கள் கொண்ட திட்டமானது வருகின்ற 1.09.2022 முதல் வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணையில் கூறியுள்ளார்.