அடுத்தடுத்து அர்ச்சகர்களுக்கு அள்ளிக் கொடுக்கும் அரசு! ஓய்வூதியத் தொகை உயர்வு;

நேற்றைய தினம் பலரும் எதிர்பாராத அறிவிப்பாணை வெளியானது. அதன்படி நேற்றைய தினம் கோவில் ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் ஆயிரம் ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாக உயர்த்தப்பட்டு அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. அதோடு மட்டுமில்லாமல் அரசு நிர்வாகத்திற்கு உட்பட்ட கோயில்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்த அறிவிப்பு வெளியாகியிருந்தது.

இந்த சூழலில் கோவில்களில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் உயர்த்தப்பட்டு அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி அறநிலை துறை கட்டுப்பாட்டு கோவில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற அர்ச்சகர்களுக்கு ஓய்வூதியத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது.

ஓய்வூதியம் முன்பதாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இந்த ஆயிரம் ரூபாய் ஓய்வூதியத்தை 3000 ரூபாய் ஆக உயர்த்தும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதனால் அறநிலை துறை கட்டுப்பாட்டில் இல்லாத கோவிலில் பணி புரிந்து ஓய்வுபெற்ற அர்ச்சகர்களின் ஓய்வூதியம் 4 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று இன்று என அடுத்தடுத்து அர்ச்சகர்களுக்கு ஏற்ற அறிவிப்பு வெளியாகி உள்ளதால் அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் காணப்படுகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment