Connect with us

அரசு ஊழியர்கள் வேலை நேரங்களில் செல்போன் பேச தடை..!! உயர் நீதிமன்றம் உத்தரவு;

do not use moble

தமிழகம்

அரசு ஊழியர்கள் வேலை நேரங்களில் செல்போன் பேச தடை..!! உயர் நீதிமன்றம் உத்தரவு;

அரசு ஊழியர்கள் வேலை நேரங்களில் செல்போன் பேச தடை..!! உயர் நீதிமன்றம் உத்தரவு;

தற்போது மொபைல் போன் என்பது அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டது. எதற்கெடுத்தாலும் மொபைல்போன் என்பது போலத்தான் மக்கள் பயன்படுத்துகின்றனர். பலரும் இதனை பணி நேரங்களில் பயன்படுத்துகிறார்கள்.

அதுவும் குறிப்பாக அரசு வேலையில் உள்ளவர்கள் தங்களது வேலை நேரத்தில் சொந்த வேலைக்காக பயன்படுத்துவது, இதர காரணங்களுக்காக தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவது அதிகமாக நடைபெறுகிறது.

இதனை தடுக்கும் வகையில் சென்னை உயர்நீதிமன்றம் பணி நேரங்களில் தொலைபேசி பேச தடை விதித்துள்ளது. அதன்படி பணி நேரத்தில் அரசு ஊழியர்கள் எந்த காரணம் கொண்டும் தங்கள் சொந்த வேலைக்காக கைபேசி பயன்படுத்தத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அலுவல் பயன்பாட்டுக்கு தனியாக செல்போன் பயன்படுத்த வேண்டும் என்று நீதிபதி சுப்பிரமணியம் உத்தரவிட்டார். பணி நேரத்தில் அரசு ஊழியர்கள் செல்போன் பயன்படுத்துவது பற்றிய விதிமுறைகளை வகுக்க தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

விதிமுறைகளை பின்பற்றாத அரசு ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் பரிந்துரைத்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top