Connect with us

முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் பொதுப் பிரிவுக்கான ஒதுக்கீட்டில் அரசு மருத்துவர்கள் பங்கேற்கலாம்!: ஹைகோர்ட்

govenrment doctors

செய்திகள்

முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் பொதுப் பிரிவுக்கான ஒதுக்கீட்டில் அரசு மருத்துவர்கள் பங்கேற்கலாம்!: ஹைகோர்ட்

முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் பொதுப் பிரிவுக்கான ஒதுக்கீட்டில் அரசு மருத்துவர்கள் பங்கேற்கலாம்!: ஹைகோர்ட்

ஏழை எளிய மாணவர்களின் கனவாக காணப்படுவது மருத்துவ படிப்பு தான். அதிலும் குறிப்பாக எம்பிபிஎஸ் ஆக வேண்டும் என்ற லட்சியத்தோடு பலரும் முனைப்போடு படித்துக் கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் இளங்கலை படிப்புக்கான கலந்தாய்வு நடைபெற்றது.

இதில் ஏராளமான மாணவர்கள் வரிசைகட்டி கலந்துகொண்டனர். இந்த நிலையில் சென்னை ஹைகோர்ட் முதுநிலை மருத்துவ படிப்பு குறித்த உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி முதுகலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் பொதுப் பிரிவுக்கான ஒதுக்கீட்டில் அரசு மருத்துவர்கள் பங்கேற்கலாம் என்று ஹை கோர்ட் கூறியுள்ளது.

50 சதவீத ஒதுக்கீட்டில் அரசு மருத்துவர்கள் கலந்து கொள்ளலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. அரசு மருத்துவர்கள் பொதுப்பிரிவு சேர்க்கையில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டதை எதிர்த்து தொடர்ந்த வழக்கு தள்ளுபடி ஆனது.

50 சதவீதம் இடம் அல்லது 30 சதவீதம் வெயிட்டேஜ் மதிப்பெண் இவற்றில் ஏதாவது ஒன்றை தான் வழங்க வேண்டும் என்றும் மனுதாரர் குறிப்பிட்டிருந்தார். கிராமப்புறங்களில், அணுக முடியாத பகுதிகளில் அரசு மருத்துவர்கள் பணிபுரிவதால் மக்கள் பயன் பெறுகின்றனர் என்று அரசு மருத்துவர்கள் சங்கம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top