பொது மக்களோடு போராட்டத்தில் இணைந்த அரசு மருத்துவர்கள்-மருந்து பொருட்களின் தட்டுப்பாடு;

இலங்கையில் உள்ள ஒரு சில மக்கள் அவ்வப்போது அண்டை நாடுகளுக்கு கடல் வழியாக தப்பி செல்ல முயற்சிக்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து கடற்படையால் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

ஆனால் பெரும்பாலானோர் இலங்கை அரசுக்கு எதிராக தொடர்ந்து கண்டன ஆர்ப்பாட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏனென்றால் இலங்கையில் பெரும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது, கட்டுப்படுத்த முடியாமல் இலங்கை அரசும் சிக்கித் தவிக்கிறது.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மீண்டும் இலங்கையில் அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டது. ஆயினும் கூட அவசரநிலைப் பிரகடனத்தை மீறி தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருவதாக தெரிகிறது.

இந்த போராட்டத்தை தடுக்க காவல் துறையினருக்கு பல்வேறு விதமான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் போராட்டத்தில் இலங்கை அரசு மருத்துவர்களும் இணைந்து உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

பொருளாதார நிலை மோசமடைந்து வரும் நிலையில் இலங்கையில் மருந்து பொருட்களின் தட்டுப்பாடு கடுமையாக அதிகரித்துள்ளது. சுகாதார பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி யாழ்பாணம் மருத்துவமனை வளாகத்தில் இலங்கை அரசு மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம் செய்துகொண்டு வருகின்றனர். மேலும் இலங்கையில் பிறப்பிக்கப்பட்ட அவசர நிலை பிரகடனத்திற்கு அமெரிக்க ஐரோப்பிய ஒன்றியம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment