சினிமா படத்தை நினைவூட்டிய அரசுப் பேருந்து!! என்னவாக இருக்கும் ?
திருப்பூரில் அரசு பேருந்தின் முன் பக்க சக்கரம் திடிரென கழண்டு ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லையில் இருந்து அரசு பேருந்து ஒன்று கோவையை நோக்கி திருப்பூர் மாவட்டம் பல்லடம், தாராபுரம் சாலையில் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது.
அப்போது திடிரென பேருந்தின் முன் பக்க சக்கரம் திடிரென கழண்டு சுமார் அரை கிலோமீட்டர் தூரம் வரை சென்று இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதனை அறிந்த ஓட்டுனர் உடனடியாக பேருந்த நிறுத்தினார். இதனையடுத்து பேருந்தில் பயணம் செய்த 47 பயணிகள் பத்திரமாக உயிர் தப்பினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
