விடிந்ததும் ஸ்ட்ரைக்…; போராட்டத்தில் குதித்த அரசு பஸ் ஓட்டுனர்கள், கண்டக்டர்கள்….! போனஸ் வழங்காததால் அதிருப்தி;
இந்தியாவில் தற்போது வேலைநிறுத்த போராட்டம் என்பது சாதாரணமாக காணப்படுகிறது. இந்த வேலை நிறுத்த போராட்டம் என்பது ஊழியர்கள் தங்களது கோரிக்கையை நிறைவேற்றாத போது ஏற்படுகிறது.
இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பெரும்பாலும் அரசு ஊழியர்கள் பங்கேற்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏனென்றால் அவர்கள் சம்பள உயர்வு மற்றும் போனஸ் உள்ளிட்ட காரணங்களுக்காக வேலைநிறுத்த போராட்டத்தில் அதிக அளவு ஈடுபடுவார்கள்.
அதுவும் குறிப்பாக ஆசிரியர்கள், மருத்துவர்கள் என பலரும் வேலைநிறுத்த போராட்டத்தில் அதிகளவு ஈடுபடுவார்கள். இந்த நிலையில் தற்போது அரசு பஸ் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் ஸ்ட்ரைக் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி புதுச்சேரி அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் காலை முதல் திடீரென்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரியில் இன்று காலை முதல் அனைத்து நகர மற்றும் தொலைதூர பேருந்துகள் ஓடாததால் புதுச்சேரி மக்கள் அவதிப்படுகின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக போனஸ் வழங்காததை கண்டித்து புதுச்சேரியில் அரசு பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
