Connect with us

லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து; ஓட்டுநர், நடத்துநர் உடல் நசுங்கி பலி!

Accident

தமிழகம்

லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து; ஓட்டுநர், நடத்துநர் உடல் நசுங்கி பலி!

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் சின்னாறு என்ற இடத்தில் முன்னால் சென்றுகொண்டிருந்த லாரி மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் அரசு பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருச்சி கிளைக்கு சொந்தமான அரசு பேருந்து ஒன்று சென்னையிலிருந்து – திருச்சி நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் வந்துள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து இன்று காலை பெரம்பலூர் மாவட்டம் சின்னாறு என்ற இடத்தில் முன்னால் இரும்பு கம்பி ஏற்றி சென்ற லாரி மீது அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளானது.

இந்த கோர விபத்தில் பேருந்தின் முன்புறம் முற்றிலும் நாங்கிய நிலையில் சுமார் 10 மீட்டர் தூரம் பேருந்தை லாரி இழுத்து சென்றுள்ளது. இந்த விபத்தில் திருச்சி தீரன் நகரை சேர்ந்த பேருந்து ஓட்டுனர் தேவேந்திரன் மற்றும் முன் இருக்கையில் அமர்ந்திருந்த நடத்துனர் முருகன் இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாமாக உயிரிழந்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மங்களமேடு போலீஸார் தீயணைப்பு துறையினரின் உதவியுடன் இறந்தவர்களின் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மீ பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்தில் படுகாயமுற்ற 10-க்கும் மேற்பட்டோர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து குறித்து வழக்குபதிந்த மங்களமேடு போலீஸார் விபத்து நடந்தது குறித்து லாரி ஓட்டுனரிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top