தொடர்ச்சியாக நம் தமிழகத்தில் தினந்தோறும் சாலை விபத்துக்கள் நடந்து கொண்டுதான் வருகிறது. அதிலும் இருசக்கர வாகன விபத்துக்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் தினமும் நடப்பதாக காணப்படுகிறது.
இந்த விபத்துக்கள் ஒரு சில நேரங்களில் உயிரிழப்பையும் உண்டாக்கும். அதிலும் பெரும்பாலும் லாரி மீது மோதினால் கண்டிப்பாக உயிரிழப்பு ஏற்படும் என்பது போல் விபத்து நிகழும். அந்த வகையில் லாரி மீது அரசு பேருந்து மோதி ஓட்டுநர் மற்றும் நடத்துனர் உயிரிழந்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டம் சின்னார் என்ற இடத்தில் லாரி மீது பின்னால் வந்த அரசு பேருந்து மோதியதில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் உயிரிழந்துள்ளனர். சென்னை-திருச்சி பேருந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் தேவேந்திரன் மற்றும் நடத்துனர் முருகன் ஆகியோர் உயிரிழந்தனர்.
பதினைந்து பயணிகள் படுகாயம் அடைந்தனர். பயணிகள் அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு விரைந்து அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.