வாய்க்காலில் கவிழ்ந்த அரசு பேருந்து; 60க்கும் மேற்பட்டோர் காயம்!

விருத்தாசலம் அருகே கோமங்கலம் கிராமத்தில் அரசு பேருந்து பாசன வாய்க்காலில் கவிழ்ந்து 60 க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் அனுமதி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே சேப்பாக்கம் கிராமத்திலிருந்து அரசுப் பேருந்தை ஓட்டுநர் சரவணன் இன்று காலை 7:30 மணியளவில் பேருந்தை நகர், நல்லூர், கண்டப்பன்குறிச்சி, சாத்தியம், விளாங்காட்டூர் வழியாக விருத்தாசலம் நோக்கி ஓட்டி வரும்போது கோமங்கலம் அருகே எதிரே வந்த நெல் அறுக்கும் இயந்திரத்தால் கட்டுப்பாட்டை இயந்து அருகில் உள்ள பாசன வாய்க்காலில் பேருந்து கவிழ்ந்தது.

இதில் பயணம் செய்த பள்ளி மாணவர்கள், கூலி தொழிலாளிகள், விவசாயிகள் உட்பட 60க்கு மேற்பட்டோர் பலத்த காயங்கள் ஏற்பட்டு அவர்களை அருகில் உள்ளவர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர் .

அங்கு சிகிச்சை பெற்று வந்த 60 பயணிகளை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ. கணேசன் நேரில் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறி உணவு பண்டங்களை வழங்கினார்.

இதில் விருத்தாசலம் நகர மன்ற தலைவர் சங்கவி மற்றும் விருத்தாசலம் திமுக நகர செயலாளர் தண்டபாணி ஆகியோர் உடன் இருந்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.