அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி – ஆன்லைன் விண்ணப்பங்கள் இன்று துவக்கம்!

தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்று (திங்கட்கிழமை) தொடங்க உள்ளது, இந்நிலையில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

www.tngasa.in என்ற இணையதளம் மூலம் மாணவர்கள் இன்று முதல் மே 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமைச்சர் பொன்முடி கூறியது : மாணவர்களின் தரவரிசை பட்டியல் மே 23ம் தேதிக்குள் கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும், அரசு கலைக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட பொது கலந்தாய்வு மே 30ம் தேதி முதல் ஜூன் 9ம் தேதி வரை நடைபெறும்.

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் – 94.03 சதவீத தேர்ச்சி!

தமிழகத்தில் கல்லூரி கல்வி இயக்குனரகத்தின் கீழ் 1,547 அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 143 கல்லூரிகள் அரசு நடத்தும் கல்லூரிகளில் 92,000க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன.

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.