Entertainment
கவுண்டமணி வசனத்தை தவறாக பயன்படுத்திய திரைப்பட தயாரிப்பாளருக்கு நோட்டீஸ்
கவுண்டமணி தமிழ் சினிமாக்களில் புகழ்பெற்ற காமெடி நடிகர். இவரது பேட்டிகள் பெரும்பாலும் எதிலும் வந்திருக்காது. அவ்வப்போது சில பட விழாக்களில் தலை காட்டுவதோடு சரி.

சினிமா காமெடியை தவிர கவுண்டமணியின் பெயர் எந்த ஒரு விசயத்திலும் அடிபடாது. முதல் முறையாக தன் வசனத்தை தவறாக வைத்த தயாரிப்பாளர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார் கவுண்டமணி.
கவுண்டமணி அவர்களின் அனுமதி பெறாமல் அவருடைய புகைப்படத்தையும் வசனங்களையும் ‘சிக்ஸர்’ என்ற திரைப்படத்தில் தவறான முறையில் அவதூறாக பயன்படுத்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திரு.கவுண்டமணி அவர்களின் வழக்கறிஞர் திரு. க.சசிகுமார் அவர்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
