கோதண்டராமர் கோவில்- ராமேஸ்வரம்

46692a520be604b88f9af6271ca40b1e

ராமேஸ்வரத்தில் உள்ளது கோதண்டராமர் கோவில். இக்கோவில் தனுஷ்கோடி செல்லும் வழியில் முகுந்தராயர் சத்திரத்துக்கு முன்பு உள்ளது இந்த இடத்திற்கு முன்பு செல்ல சரியான சாலை வசதி இருக்காது. தற்போது புயலால் அழிந்த தனுஷ்கோடிக்கு புதிய சாலை போடப்பட்டு 4 வருடத்துக்கும் மேலாகிறது. அதனால் மிக விரைவாக இங்கு செல்லலாம்.

கடற்கரையோரத்தில் மிக அருமையான தலம். இராமாயணத்தில், விபீசணன் தன் சகோதரன் ராவணனிடம், சீதையைக் கவர்ந்து வந்தது தவறு என்றும், அவளை ராமரிடமே ஒப்படைக்கும்படியும் அறிவுரை கூறினார். ராவணன் அதை ஏற்க மறுத்ததுடன், வீடணனை காலால் மிதிக்கச் சென்றார் .இதனால் வெறுப்புற்ற வீடணன் ராமருக்கு உதவி செய்வதற்காக ராமரிடம் சரணாகதி அடைந்தார். வீடணனை தன் தம்பியாக ஏற்றுக்கொண்ட ராமன், இலங்கையை வெற்றி பெறும் முன்பாகவே, இலங்கை வேந்தனாக பட்டாபிஷேகம் செய்து வைத்தார். வீடணனை பட்டாபிஷேகம் நடந்த இடத்தில், ராமருக்கு அமைக்கப்பட்ட கோயில் கோதண்டராமர் கோயில் ஆகும். இக்கோயிலில் ராமபிரான் அருகில் விபீஷணன் வணங்கியபடி இருக்கிறார்.

இந்த வரலாற்றின் அடிப்படையில் இந்த கோவில் உள்ளது. ராமேஸ்வரம் வருபவர்கள் இந்த கோவில் செல்லாமல் செல்ல மாட்டார்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews