பதவியை விட மறுக்கும் கோத்தபய! – இலங்கையில் நடப்பது என்ன?
இலங்கையில் கடந்த ஒரு மாதகாலமாகவே பெரும் பொருளாதர நெருக்கடி நிலவிவருகிறது. இதனால் அத்தியாவச பொருட்கள் கூட வாங்க முடிய நிலையில் மக்கள் பட்டினி கிடந்து வருகின்றன.
இதனால் அந்நாட்டை ஆளும் ராஜபக்சே குடும்பத்தினர் மீது பொதுமக்களின் கோவம் திரும்பி இருக்கிறது. ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராக போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
எதிர்கட்சிகளும் குரலை உயரத்த இலங்கை அரசில் 26 அமைச்சர்கள் தங்களது பதவியினை ராஜினாமா செய்திருக்கிறனர். ஆனால், அதிபர் மற்றும் பிரதமர் தங்களது பதவியினை ராஜினாமா செய்யவில்லை.
அவர்கள் புதிதாக கொண்டுவந்த 4 அமைச்சர்களின் நிதி அமைச்சராக பதிவியேற்ற அலி சப்ரி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த பரபரப்பான சூழலில் ராஜபக்சே குடும்பத்தினருக்கு ஆதரவு கொடுத்த 41 எம்.பி- கள் வாப்பஸ் பெற்றனர். இந்த சூழலில் கோத்தபய ராஜபக்சர் தன்னுடைய பதவியினை ராஜினாமா செய்ய மாட்டேன் என கூறிவிட்டார்.
இந்நிலையில் கோத்தபய ராஜபக்சர் பதவியினை ராஜனாமா செய்யாத வரையில் எந்த அரசியலும் உருவாக போவதில்லை என கூறப்படுகிறது. ஆனால் புதிய அரசியல் உருவாகினால் மட்டுமே இலங்கையில் மாற்றத்தை கொண்டுவர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
