அனைத்து கட்சிகளும் கேட்டுக்கொண்டால் பதவி விலகத்தயார் ;; கோத்தபய ராஜபக்சே

இலங்கையில் இரண்டு மாதகாலமாகவே கடும் பொருளாதர நெருக்கடி நிலவிவருகிறது. இதன் காரணமாக அந்நாட்டு மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க முடிய நிலையில் திண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் இலங்கையின் முக்கிய நகரமாக கொழும்பில் நாளோன்றுக்கு 13 மணி நேரம் வரை மின்வெட்டு செய்யப்படுகிறது.

இதனால் பொதுமக்கள் மின் இணைப்பு கிடைக்காமல் மக்களின் அன்றாட வாழ்க்கை முடங்கியுள்ளது.  இதனால்  ஒட்டுமொத்த மக்களும் ’இலங்கை அதிபர் உடனடியாக பதவி விலக வேண்டும்’ என்று கோஷமிட்டு தொடர் போராட்டத்தில்  குதித்துள்ளனர்.

இந்த சூழலில் அனைத்து கட்சிகளும் கேட்டுக் கொண்டதால் பதவி விலகத் தயார் என அந்நாட்டு அதிபர் கோத்தபய  ராஜபக்சே தெரிவித்திருப்பது இலங்கை அரசியலில் மிகப்பெரிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே, அவர் அமைச்சர்களை பதவி விலக செய்து முக்கியமான துறைகளுக்கு புதிய அமைச்சர்களை நியமித்தார். இதனிடையே ஒருபுறம் மக்கள் போராட்டம் மறுபுறம் எதிர்க்கட்சிகளின் நெருக்கடிகளுக்கு மத்தியில் அதிபர் பதவியில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment