Connect with us

மீண்டும் இலங்கை திரும்பும் கோத்தபய ராஜபக்சே! எப்போது தெரியுமா?

gotabaya rajapaksa3 6004 1573967523 1657376176

செய்திகள்

மீண்டும் இலங்கை திரும்பும் கோத்தபய ராஜபக்சே! எப்போது தெரியுமா?

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே வெளியேற சிங்கப்பூர் அரசு உத்தரவிட்டு இருப்பதால் அவர் விரைவில் கொழும்பு திரும்ப இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சிக்கு எதிராக மக்களின் போராட்டமானது வன்முறையாக வெடித்ததால் கடந்த 13-ஆம் தேதி கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மாலத்தீவுக்கு சென்ற கோத்தபாயவுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கிருந்து சிங்கப்பூருக்கு அவர் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரை நாட்டுக்குள் அனுமதித்த சிங்கப்பூர் அரசு அடைக்கலம் தர திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

இதனிடையே கோத்தபய ராஜபக்சேவின் வருகையை எதிர்த்து சிங்கப்பூரிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதனால் முன்னாள் அதிபர் கோத்தபய மற்றும் அவரது மனையையும் நாட்டை விட்டு வெளியேற சிங்கப்பூர் அரசு உத்தரவிட்டு இருந்தது.

கோத்தபயாவின் மகன் அமெரிக்காவில் இருந்த போதிலும் அங்கு அவர் செல்ல விரும்பவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் இலங்கை செல்ல முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக சிங்கப்பூரில் இருந்து துபாய் செல்லும் கோத்தபய அங்கிருந்து கொழும்பு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top