
செய்திகள்
பதவியை இராஜினாமா செய்தார் கோத்தபாய ராஜபக்சே! அடுத்த அதிபர் யார் தெரியுமா?
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலவி வரும் சூழலில் அந்நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் நாட்டின் ராஜபக்சேக்கள் பதவி விலக வேண்டுமென போராட்டம் நடத்தினர்.
அந்த வகையில் மக்கள் போராட்டம் தீவிரம் அடைந்ததால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே திரிகோணமலைக்கு தப்பியோடியதாக தகவல்கள் கூறப்பட்டது.
இந்த சூழலில் நேற்று முன்தினம் இலங்கை முழுவதும் அதிபருக்கு எதிராக பல்வேறு நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பொதுமக்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டதால் அச்சுறுத்தல் ஏற்படுமா என அஞ்சி கோத்தபய ராஜபக்சே அமெரிக்கா சென்றுள்ளதாக தகவல்கள் வெளியானது.
அதே சமயம் இலங்கை அதிபர் பதவியை கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியான போதிலும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என கூறப்பட்டது.
தற்போது ராஜினாமா செய்வது குறித்து பிரதமர் ரணிலுக்கு கோத்தபய ராஜபக்சே அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளதாக பிரதமர் அலுவலகத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அடுத்த அதிபராக நாடாளுமன்ற அவைத் தலைவர் நியமிக்கப்படுவதாக எதிர்பார்க்கப்படுகிறது.
